Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home படைப்புகள்

ஜோதி

October 1, 2020
– ஸ்ரீவித்யா பசுபதி
village girl
school girl

“ஜோதி… நான் ரஞ்சனியம்மா வீட்டுல வேலையை முடிச்சுட்டு வந்துடறேன். ஒழுங்கா வீட்டுல உக்காந்துப் படி. ஜீவா சைக்கிள எடுத்துட்டு சுத்திட்டிருக்கான். ஆறு மணி ஆச்சுன்னா அவனையும் உள்ளார புடிச்சுப் போட்டு படிக்க வையி. என்னா…. சொல்றது காதுல விழுதா..? அப்புறம், பசிச்சுதுன்னா அடுப்படில காலைல வச்ச இட்லியும், கொழம்பும் இருக்கு… சாப்பிடுங்க. ராத்திரிக்கு நான் வந்து தோசை சுட்டுத் தரேன். அப்புறம், உங்கப்பன் வழக்கம் போல நல்லா குடிச்சுட்டுத்தான் வருவாரு…. அவருக்கு சோத்தையும், கொழம்பையும் போட்டு சாப்பிடச் சொல்லு… சரியா,” என்று பர்சை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் வசந்தா.

“அம்மா…. நானும் உன்கூட…” என்று ஜோதி முடிக்கும் முன்னே…

செய்தி அலை சிறுகதை போட்டி முடிவுகள்…

மனப் ‘பாங்கு’

வணக்கம் வாசக எழுத்தாளர்களே….

“தெரியும்டி… என்கூட வரேன்னு தானே சொல்லப் போறே? கொஞ்ச நாளா நீ சரியில்லடி. ஒம்பதாங் கிளாசுல இருக்கே… படிப்புல கவனம் வேணும் ஜோதி. படிக்குற நேரத்துல, இப்படி வீட்டு வேலைக்குப் போற எடத்துக்கு, உன்னையும் கூட்டிட்டுப் போனா, படிப்பு கெட்டுப் போயிடும்டி. தெனமும் சொல்லணுமா? நம்ம குடும்ப நெலம தெரிஞ்சுமா இப்படி அடம் புடிக்கறே? நீ ஒழுங்கா படிச்சா தானே, உன்னைப் பாத்து உன் தம்பியும் ஒழுங்கா படிப்பான். அவன் தலையெடுத்தாத்தான் எனக்கு ஒரு விடிவுகாலம் பொறக்கும். புரிஞ்சுக்கடி.”

அம்மாவிடம் சொல்லி விடலாமா என்று தொண்டை வரைக்கும் வந்ததை, சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள் ஜோதி. மகளின் முகத்தில் தெரிந்தக் கலவையான உணர்வுகளுக்கு அர்த்தம் புரியாமல், குழப்பத்துடன் கிளம்பினாள் வசந்தா.

வழியெல்லாம் அதே சிந்தனைதான் அவளுக்கு. கவலையும், குழப்பமும் கலந்து வயிற்றில் ஏதோ இம்சை செய்தது. பெருமூச்சு விட்டப்படி வேகமாக நடந்தாள்.

வசந்தா… 45 வயது. வாழ்க்கையில் பட்ட அடி அவளை முதிர்ச்சியாகக் காட்டியது. ஆனால் உடலில் 35 வயதின் வேகம். வீட்டு வேலைகள் செய்பவள். காலையில் 8:30 மணிக்கு ஆரம்பித்தால், வரிசையாக பத்து வீடுகளில் வேலையை முடித்து, மதியம் மூன்று மணிக்கு வீட்டுக்கு வருவாள். ஜோதியும், ஜீவாவும் நான்கு மணிக்கு பள்ளியிலிருந்து வருவார்கள். அவர்களைக் கவனித்துவிட்டு, வீட்டில் உள்ள வேலைகளை முடித்து, இரவு உணவுக்கு ஏதாவது தயார் செய்ய வேண்டியிருந்தால் செய்து வைப்பாள். பூக்காரம்மா கஸ்தூரிக்கு பூ கட்டி குடுப்பாள். அதில் ஏதோ ஐம்பதோ, நூறோ கிடைக்கும். பின் 5:30 மணிக்கு ரஞ்சனியம்மா வீட்டு வேலைக்குக் கிளம்புவாள். அதை முடித்து 7:30 மணிக்கு வீடு திரும்புவாள். இதுதான் அவளது தினசரி வேலை அட்டவணை.

வசந்தாவின் மகள் ஜோதி ஒன்பதாம் வகுப்பும், மகன் ஜீவா ஆறாம் வகுப்பும் பக்கத்திலிருக்கும் நகராட்சிப் பள்ளியில் படிக்கிறார்கள். படிப்புக்கு ரஞ்சனியம்மா மிகவும் உதவி செய்கிறார். வசந்தாவின் கணவன் குமரன் எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தான். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக குடிக்கு அடிமையாகி, வேலையும் இல்லாமல் இருக்கிறான். குடும்ப பாரம் முழுவதும் வசந்தாவின் தலையில்தான். வீட்டில் ஆண்துணை என்று வேண்டுமே என்பதற்காக, அவனை பொறுத்துக் கொண்டிருக்கிறாள், வசந்தா. வயது வந்தப் பெண்ணையும் வைத்துக் கொண்டு தனியாக இருந்தால்…. யோசித்துப் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முன்பு, திடீரென ஒரு நாள், வசந்தா ரஞ்சனியம்மா வீட்டுக்கு வேலைக்குக் கிளம்பும் போது, ஜோதி தானும் வருவதாகச் சொன்னாள். சரி…. ஏதோ பொழுது போகாமல் கேட்கிறாள் என நினைத்து, வசந்தாவும் தன்னுடன் அழைத்துப் போனாள். ஜோதியும் அம்மாவுக்கு உதவியாக, கூட மாட வேலைகள் செய்தாள். மறுநாளும் இது தொடர்ந்தது. அதற்கு மறு நாளும், ஜோதி இதே போல் கேட்கவே, வசந்தா கத்தி விட்டாள்.

“என்னாடி நினைச்சுட்டிருக்கே உன் மனசுல? ஏதோ சும்மா ஒரு நா, ரெண்டு நா போனாப் போவுதுன்னு கூட்டிட்டுப் போனா, தெனமும் என்கூட கெளம்பறே? படிக்க வேணாமா? என்னைய மாதிரி வீட்டு வேலை செய்யப் போறியா? அதுக்காகவாடி நான் இவ்வளவு மெனக்கெட்டு உங்க ரெண்டு பேரையும் படிக்க வைக்கறேன்? என் கோவத்தக் கெளறாதடி ஜோதி. இனிமே இப்படிக் கேக்காம, படிப்புல கவனம் வையி…. புரிஞ்சுக்க ஜோதி.”

ஆனாலும், அதன் பின்னும், தினமும் ஜோதி அதே கேள்வியைக் கேட்பது தொடர்ந்தது. சில நேரம் பொறுமையாகவும், சில நேரம் கோபமாகவும் பதில் சொல்வாள் வசந்தா. இதோ இன்றும் அப்படித்தான். ஆனால் ஜோதி ஏன் அப்படிக் கேட்கிறாள் என்பது மட்டும் வசந்தாவுக்குப் புரியவில்லை. வசந்தாவின் வாழ்க்கைப் போராட்டத்தின் வெறுப்புகளையும், கோபத்தையும் கொட்டும் வடிகால் ஜோதியும், ஜீவாவும் மட்டுமே. அதனால் இது மாதிரி ஏதாவது நச்சினால் கோபம்தான் வருகிறதே ஒழிய, அதை அலசி ஆராயும் மனநிலை வசந்தாவுக்கு இல்லை.

பலவித யோசனைகளுடன் ரஞ்சனியம்மா வீட்டுக்கு வந்து, வேலைகளை ஆரம்பித்தாள். ஆனால் ஜோதியைப் பற்றிய கவலை மட்டும் அவளைக் குடைந்துக் கொண்டிருந்தது.

“என்ன வசந்தா… ஏதோ குழப்பத்துல இருக்கற மாதிரி இருக்கு? ஏதாவது பிரச்சனையா?” என்றாள் ரஞ்சனி.

“இல்லங்கம்மா….. ஒண்ணுமில்ல…”

“இல்லையே… உன் முகமே சரியில்லையே…. என்ன… உன் புருஷன் வழக்கம் போல குடிச்சுட்டு வந்து கலாட்டா பண்றானா?”

“அது தெனமும் நடக்கறது தானேம்மா. அந்தாளை நான் ஒரு மனுஷனாவே மதிக்கறதில்லமா. இந்த ஜோதி என்னவோ சரியில்லம்மா. அதான் கொஞ்சம் கவலையா இருக்கு.”

“என்ன வசந்தா இப்படிச் சொல்றே? ஜோதி தங்கமான பொண்ணாச்சே. அதிர்ந்துக் கூட பேச மாட்டாளே… நீ தேவையில்லாம போட்டு குழப்பிக்கிட்டு, அவளையும் நோகடிச்சுடாதே. படிக்கற பொண்ணு… மனசு நொந்தா படிப்புல கவனம் போயிரும்.”

“இல்லங்கம்மா… அன்னிக்கு ஒரு ரெண்டு நா உங்க வீட்டுக்கு கூட்டியாந்தேனில்ல…. அதுல இருந்து, தெனமும் நான் உங்க வீட்டுக்குக் கெளம்பும் போது, கூட வரேன்னு நிக்குதும்மா. நானும் அன்பா சொல்லிப் பார்த்துட்டேன், திட்டியும் விட்டுட்டேன். ஆனா அவ கேக்கறத மட்டும் நிறுத்தல. இதோ… இன்னிக்குக் கூட கேட்டா. அதான் குழப்பமா இருக்கு.”

“அப்படியா…? அவ ஏன் அப்படி கேக்கறான்னு அவகிட்ட விசாரிச்சியா? என்ன காரணம் சொல்றா?”

“காரணம் என்னம்மா காரணம். அது வெளையாட்டுப் புள்ள. படிக்காம ஒப்பேத்தறதுக்கு வழி தேடுது. வேற என்ன?”

“தப்பு வசந்தா. ஒரு பொண்ணு தினமும் இப்படிக் கேக்கறானா, வேற ஏதாவது காரணம்கூட இருக்கலாம். அந்த நேரத்துல, வீட்டுல இருக்க அவளுக்குப் பிடிக்கலையோ என்னவோ…”

“என்னம்மா சொல்றீங்க?”

“இல்ல வசந்தா… உன் புருஷன் தினமும் இந்த நேரத்துக்குத் தானே குடிச்சுட்டு வீட்டுக்கு வரான். அவன் வந்து ஏதாவது தகராறு பண்றானோ என்னவோ… அதுல இருந்து தப்பிக்கக் கூட ஜோதி அப்படி கேக்கலாம். என்ன, ஏதுன்னு விசாரி.”

‘பக்’கென்றது வசந்தாவுக்கு. அதன் பின் வேலையே ஓடவில்லை. ரஞ்சனியம்மாவிடம் நாளை வந்து செய்வதாய்ச் சொல்லிவிட்டு, ஓட்டமும், நடையுமாக வீட்டுக்கு வந்தாள்.

வீட்டில் அவள் கண்ட காட்சி… அதிர்ந்துப் போனாள் வசந்தா. கையில் அரிவாள்மனையுடன் ஜோதி…

“வேண்டாம்…. அப்பனாச்சேன்னு நானும் பொறுமையா இருக்கேன். அதுக்காக மேல கை வைக்கற வேலையெல்லாம் வேண்டாம். அம்மாவுக்காக நானும் பாக்கறேன். குடிச்சுட்டா கண்ணு மண்ணு தெரியாதா…? பெத்தப் பொண்ண போயி… தூ… தெனம் தெனம் உனக்கு பயந்து வாழறதவிட ஒரே போடு… எல்லாத்துக்கும் நிம்மதி…” ஆக்ரோஷமாகக் கத்தினாள் ஜோதி.

வசந்தா ஓடிப்போய் குமரனைப் பிடித்துத் தள்ளிவிட்டு, ஜோதியைக் கட்டிக் கொண்டாள். இருவர் கண்களிலும் கண்ணீர் பெருகியது. அந்தக் கண்ணீரில் வசந்தாவின் குழப்பமும், ஜோதியின் பயமும் கரைந்துப் போயின.

– கதைப் படிக்கலாம் – 120

இதையும் படியுங்கள் : தவறு

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கதர் ஆடைகளை பயன்படுத்தி நெசவாளர்களுக்கு கைகொடுக்க வேண்டும்:பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

Next Post

தமிழகத்தில் அஞ்சல்துறையில் 3,162 பணியிடங்கள்..விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

Next Post

தமிழகத்தில் அஞ்சல்துறையில் 3,162 பணியிடங்கள்..விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version