பிக்பாஸ்ஸில் பாலாவுக்கு ரெட்கார்ட் கொடுக்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிக்கு ரெட்கார்ட் கொடுக்கப்படுமா என்ற கேள்வி பிக்பாஸ் பார்வையாளர்களிடம் எழுந்துள்ளது.
ஏனெனில், இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் முடிந்து இந்த வாரம் யார் சிறப்பாக செயல்படாதவர்களை நாமினேட் செய்யும் போது பாலாஜிக்கும் ஆரிக்கும் விவாதம் எழுந்தது. மேலும் இவர்கள் ஓய்வறைக்கும் போகும் போது அங்கு பாலாஜி கோபத்தில் மைக்கை எடுத்து உடைத்தார்.
READ MORE- ”ஆஜீத்துக்கு இன்னும் கேம் புரியல” #BiggbossPromo2
மேலும் தற்போது வெளியாக்யிருக்கும் புரோமோவிலும் பாலாஜி ஆரியிடம் கத்திவிட்டு கோபத்தில் தலையணையை தூக்கி அடித்து இருக்கிறார்.
மேலும் இதற்கு முன்பும் சனம் இருக்கும் போது அவர் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள், பிக்பாஸ் வீட்டுக்குள் மைக் அதிகம் மாட்டாமல் இருப்பது, ரூல்ஸ் பின்பற்றாதது ஆகியவையும் தற்போது நடந்த விஷயங்களும் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படுமா எனவும் பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் தற்போது கேள்வி எழுந்துள்ளது.




