மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயனாக நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் நானும் ரவுடி தான்.இந்த படத்தில் தான் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது . இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றினாலும் ரசிகர் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர் லோகேஷ் பாப்.
மேலும் இவர் தொலைக்காட்சிகளிலும் தனது நகைச்சுவையால் பிரபலமானார். இதனிடையே கடந்த மார்ச் மாதம், இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவரை நேரில் சந்தித்து மருத்துவ உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில் தற்போது லோகேஷின் அடுத்தக்கட்ட அறுவை சிகிச்சைக்கு பண உதவிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் செய்த உதவிகளால், லோகேஷின் முதல்கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இப்போது இரண்டாம் கட்ட சர்ஜரி செய்ய வேண்டும் எனவும் அதற்கு சுமார் 5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது என்றும் 20 நாட்களுக்குள் இந்த சர்ஜரியை செய்ய வேண்டும். ஆனால், லோகேஷ் பாப் குடும்பம் பணமின்றி தவிக்கின்றனர். இதனால், முடிந்தவர்கள் உதவிகளை செய்யுங்கள்’ என அவர் கேட்டு கொண்டுள்ளார்