8 கோடி பேர் பேர் மாஸ்டர் படப் பாடல்தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை சமூக வலைத்தளங்களில் 8 கோடி பேர் பார்த்துள்ளனர்.
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. கார்த்தி நடித்த கைதி வெற்றி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் ஏராளமான நட்சத்திரக் கூட்டம் இருப்பதால் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.
படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சினையால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் அனிருத் இசையமைத்திருக்கும் ‘வாத்தி கம்மிங்…’ என்ற பாடல் முன்னதாகவே வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்பாடல் 8 கோடி பார்வையாளர்களை கடந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
விஜய்படத்தின் பாடல் சமூக வலைத்தளங்களில் 8 கோடி பேர் பார்த்திருக்கும் நிகழ்வை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.