பிக்பாஸ்ஸில் இந்த வாரம் எவிக்ட் ஆவது ஆஜீத்தா அனிதாவா என்பதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

பிக்பாஸ்ஸில் இந்த வாரம் நாமினேஷனில் அனிதா, ஆஜீத், கேபி, ஷிவானி, ஆரி இவர்கள் எல்லாரும் பட்டியலில் இருந்தார்கள். அந்த வகையில் இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே அனிதா மற்றும் ஆஜீத் இவர்கள் இருவருக்குமே ஓட்டுகள் கம்மியாக இருந்தது.
அந்த வகையில் இந்த வாரம் வெளியேறுவது அனிதாவா ஆஜீத்தா என்ற குழப்பம் இருந்த நிலையில் அனிதாதான் வெளியேறுகிறார் என்பது உறுதியாகி உள்ளது. கடந்த சில எபிசோட்டுகளாகவே அனிதாவின் கேப்டன்சி டாஸ்க் விஷயங்கள், முறையில்லாமல் ஹவுஸ்மேட்ஸ்களால் ஓய்வறைக்கும் போனது, போட்டி மற்றும் போட்டியாளர்களின் போக்கு குறித்து சரியாக கணித்தது போன்றவற்றால் அனிதாவுக்கு ஆதரவு ரசிகர்களிடையே இருந்தது.
READ MORE- பிரபலங்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!
கமலும் தனது ஆதரவை அனிதாவிற்கு தெரிவித்திருந்தார். ஆனால், இந்த வாரம் மீண்டும் ஆரியுடன் சண்டை, குக்கிங் டீம் கேப்டனாக பொறுப்பில்லாமல் செயல்பட்டது, ஹவுஸ்மேட்ஸ்ஸூடன் அலட்சியமாக சண்டையிட்டு கொண்டே இருந்தது போன்றவற்றால் மீண்டும் பிக்பாஸ் பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார் அனிதா. அந்த வகையில், இந்த வாரம் குறைந்த ஓட்டுகள் அடிப்படையில் வெளியேறுகிறார் அனிதா.




