தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தனது சமூக வலை பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது ’எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கின்றான்’ என்று தெரிவித்துள்ளார்
பிரபல தனியார் எப். எம் இல் ஆர். ஜே வாக இருந்து தமிழ் சினிமாவின் காமெடி மற்றும் குணசித்திர நடிகராக வளம் வருபவர் நடிகர் ரமேஷ் திலக், சூதுகவ்வும், நேரம் ஆகிய படங்களில் தனது அபாரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின்னர் காக்கா முட்டை, வேதாளம், கபாலி, ஓ மை கடவுளே உள்பட பல வெற்றி படங்களிலும் நடித்த ரமேஷ் திலக் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் ரமேஷ் திலக், ‘தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தனது சமூக வலை பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது ’எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கின்றான்’ என்று தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜூலை 30ஆம் தேதி தான் அர்னால்டு, கிறிஸ்டோபர் நோலன், டயானா விக்கர்ஸ் போன்ற பிரபலங்கள் பிறந்தார்கள் என்றும் அந்த வரிசையில் உங்கள் மகனும் பிரபலமாக வருவார் என்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடன் ஆர்ஜேவாக பணிபுரியும் நவலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார் ரமேஷ் திலக்,நவலட்சுமி பிரபல ஸ்டண்ட மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரின் மகள் “நவலட்சுமி” என்பது குறிப்பிடத்தக்கது.