ரஜினியின் ’அண்ணாத்த’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ’விஸ்வாசம்’ படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியால், தனது அடுத்தப் படத்தினை இயக்கும் வாய்ப்பை ரஜினி ’சிறுத்தை’ சிவாவுக்கு கொடுத்துள்ளார். ரஜினியின் 168-வது படமான ‘அண்ணாத்த’ படத்தில் நயன்தாரா,கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடர்ந்துவந்த நிலையில் உடல்நலக்குறைவால் ரஜினி ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில்,வரும் நவம்பர் 4 தீபாவளியையொட்டி ’அண்ணாத்த’ படம் வெளியாகும் என்று படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.