15 மணி நேரத்தில் ஒரு மில்லியன்… மிரட்டலான “லிப்ட்” படத்தின் டிரைலர்.!

பிக் பாஸ் புகழ் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று மாலை வெளியிட்டார்.

பிக் பாஸ் மூலம் தமிழக மக்களின் உள்ளங்களை கவர்ந்த நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “லிப்ட்”. இந்த படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கல் இசையமைத்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப்பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

இந்நிலையில், படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்,லிப்ட் திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என நடிகர் கவின் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்று லிப்ட் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. திகில் நிறைந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். மேலும், இந்த டிரைலரை நடிகர் சிவகார்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெளியான 15 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை பெற்று அசத்தியுள்ளது லிஃப்ட் ட்ரைலர்.

Exit mobile version