செம ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் ரஜினி முருகன், பைரவா, ரெமோ, தொடரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். மேலும் நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் துபாய் சென்ற கீர்த்தி சுரேஷ் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . ஸ்டைலிஷ் லுக்கில் கீர்த்தி சுரேஷ் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Exit mobile version