தேசிய கல்வியாளர் விருது பெற்றார் நடிகர் தாமு…

கல்வி சேவையை பாராட்டி தேசிய கல்வியாளர் விருது பெற்ற திரைப்பட நடிகர் தாமுவிற்கு ஜே. கே. அறக்கட்டளையின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு சர்வதேச பெற்றோர் ஆசிரியர் மாணவர் பேரவை என்ற அமைப்பை தொடங்கி பல்வேறு வகையான கல்வி சேவையை வழங்கி வருகிறார்.

மேலும், தமிழக இளைஞர்களின் வளர்ச்சிக்காக ஒரு லட்சம் பேராசிரியர்கள், 30 லட்சம் பெற்றோர் மற்றும் 20 லட்சம் இளைஞர்களை ஒருங்கிணைந்து மனவர்களளுக்கு கல்வி விழிப்புணர்வு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக நடிகர் தாமு மேற்கொண்ட இந்த முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் “ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021” என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது.

கல்வி வளர்ச்சி கவுன்சில் தேசிய தலைவர் குன்வர் சேகர், ஏ.ஐ.சி.டி.இ., ஆலோசகர் பேராசிரியர் ஹரிஹரன், பிரஸ்டீஜ் பல்கலை அதிபர் டேவிட் ஜெயின் ‘அருணாச்சல் யூனிவர்சிட்டி ஆப் ஸ்டடீஸ்’ தலைவர் அஸ்வானி லோகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்தநிலையில், கல்வி சேவையை பாராட்டி தேசிய கல்வியாளர் விருது பெற்ற திரைப்பட நடிகர் தாமுவிற்கு ஜே. கே. அறக்கட்டளையின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது, ஜே. கே. அறக்கட்டளை நிறுவனர் ஜெ. ஜெயகிருஷ்ணன் முன் நின்று ஏற்பாடு செய்தார்.

Exit mobile version