எந்திரன் கதை திருட்டு வழக்கில் எனக்கு எந்த பிடிவாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்று இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை :
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வசூலில் மிக பெரிய வெற்றி பெற்ற எந்திரன் திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மூலம் இந்த திரைப்படத்தின் 2வ து பாகமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்தநிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தான் எழுதிய ஜூகிபா என்ற கதையை எந்திரன் என்ற பெயரில் இயக்குனர் சங்கர் படமாக்கிவிட்டதாகக்கூறி தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடனின் வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் ஷங்கர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த போது ஷங்கர் மற்றும் அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.
Read more – போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக சானிடைசர் கொடுத்த ஊழியர்கள் : 12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து, இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை எழும்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்து வழக்கை வருகின்ற 19 ம் தேதி ஒத்திவைப்பதாக உத்தரவிட்டது. தற்போது, இதுகுறித்து விளக்கமளித்து ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழும்பூர் நீதிமன்றம் தனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இணையத்தில் நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறே இதற்கு காரணம் எனவும், தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.




