பிக்பாஸ் புரோமோவில் ரியோ கோபமாக பேசி கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நேற்று நிகழ்ச்சியில் இருந்து ஆஜீத் வெளியேற தற்போது போட்டியாளர்கள் இறுதி கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். இதில் கடைசி நாமினேஷன்தான் இப்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் ஹைலைட் ஆகியிருக்கிறது.
இதில் இந்த வார கேப்டன் ரியோவும் நாமினேஷன் லிஸ்ட்டுக்குள் வந்திருக்கிறார். ஓப்பன் நாமினேஷன் நடக்க இதில் முதலில் வரும் ஆரி ரியோவை நாமினேட் செய்கிறார். இதற்கான காரணமாக அவர் சொல்வது, கடந்த வாரம் ஓய்வறைக்கு செல்ல ஆரியை நாமினேட் செய்யும் போது, ரியோ சொன்ன காரணங்களும் அதற்காக தான் கேட்ட போது அவர் கொடுத்த விளக்கமும் திருப்தியாகவில்லை என சொல்லி நாமினேட் செய்கிறார்.
READ MORE- பாலிவுட்டில் அறிமுகமாகும் விஜய்சேதுபதி!
அடுத்து வரும் சோம், பாலா மற்றும் ஆரியை நாமினேட் செய்து கோபத்தையும் அதில் பயன்படுத்தும் வார்த்தைகளையும் கட்டுப்படுத்த சொல்கிறார். அடுத்து ரியோ வருகிறார். இதில் இவர் யாரை நாமினேட் செய்கிறார் என்பது சொல்லவில்லை.
மாறாக ஆரி சொன்ன காரணத்தை விளக்கும் வகையில், ‘இவர் பொண்ணு வந்த போது கூட ரூல்ஸ்ஸை பிரேக் பண்ணாம இருந்தவர் அப்படி இருக்கும் போது அந்த காரணங்களை விட்டுவிட்டு இதை போய் சொல்லி இருக்கானே அப்படிங்கற தப்பான எண்ணம் என் மேல வரலாம். நான் அவ்வளவு கேவலமானவன் இல்லை’ என அப்செட்டாக சொல்வதோடு புரோமோ முடிகிறது.




