பிக்பாஸ் டைட்டில் வின்னரான பிறகு ஆரிக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்க்கு பிறகு ஆரி தொடங்கும் முதல் படம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ்ஸின் டைட்டில் வின்னர் ஆரி என்பது கடந்த சில வாரங்களுக்கு முன்பே முடிவாகிவிட்ட ஒன்று என்ற நிலையில் இந்த வாரம் அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் பிக்பாஸ் விட்டு வெளியே வந்ததும் ஆரி தன்னுடைய அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ்ஸின் அசிஸ்டெண்ட் அபின் படத்தை இயக்குகிறார். ‘தடம்’ வித்யா பிரதீப் நாயகியாக நடிக்கிறார். படத்தின் பூஜை இன்று போடப்பட்டு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
READ MORE- #Thalapathy65 ஹீரோயின், வில்லன் குறித்து கசிந்த அப்டேட்!
படத்தில் ஆரி போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பிறகு மதுரை, திண்டுக்கல் மற்றும் பழனியில் நடக்கிறது. மேலும் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் வரை காத்திருப்போம்.




