நடிகர் தனுஷும் இயக்குனர் ராம்குமாரும் புதிய திரைப்படத்தில் சேர உள்ளனர். இந்த திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
தமிழில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் தனுஷ் பிற மொழிகளிலும் வெற்றி கோடி நாட்டி வருகிறார். ஹிந்தி மொழியில் ஷமிதாப் என்னும் திரைப்படத்தில் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்தார். மேலும் பாக்கீர் என்னும் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் உலகிலும் காலடி வைத்து விட்டார். கடந்த ஆண்டு இவர் நடித்த அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்பொழுது இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் திரைப்படத்திலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்சய் குமாருடன் இணைந்து அட்ராங்கி ரே என்னும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறது.
இந்நிலையில் ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார், இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
இவர்கள் கூட்டணியில் தயாராகும் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.