சந்தையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை கண்டு வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தங்கம் வாங்க சரியான நேரம் என நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4608 ஆக உள்ளது. 8 கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 36,864- க்கு விற்பனை ஆகிறது.
நேற்றைய விலையில் இருந்து இன்று எந்த மாற்றமும் இல்லை. அதேபோல வெள்ளியின் விலையிலும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 69.70 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 69,700 க்கும் விற்பனை ஆகிறது.