ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹைனெஸ் சிபி 350 மாடல் பைக்கின், இந்திய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் ஹைனெஸ் சிபி 350 மாடல் பைக் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் அதன் விலை அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்திய சந்தையில் ஹைனெஸ் சிபி 350 டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதில், 348.36சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இடம்பெற்றுள்ளது. இந்த என்ஜின் 20.5 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இதனிடையே, புதிய மோட்டார்சைக்கிள் முன்பதிவு தொடங்கி ஹோண்டா பிங் விங் விற்பனையகங்களில் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த சுழலில், ஹைனெஸ் சிபி 350 டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ
ஆகியவற்றின் விலை முறையே ரூ. 1.85 லட்சம் மற்றும் ரூ. 1.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.