ஃபோர்டு இந்தியா தலைவர் அனுராக் மெஹ்ரோத்ரா ராஜினாமா…!

FILE PHOTO: Anurag Mehrotra, Managing Director of Ford India, addresses the audience during the launch of Ford Aspire car in New Delhi, India, October 4, 2018. Picture taken October 4, 2018. REUTERS/Anushree Fadnavis

இந்தியாவில் கார்கள் தயாரிப்பதை நிறுத்த ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்ததை அடுத்து அதன் இந்தியா தலைவர் அனுராக் மெஹ்ரோத்ரா பதவி விலகினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்திற்கு சென்னையிலும், குஜராத்திலும் என இரு மிகப்பெரிய ஆலைகள் உள்ளன. இங்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில்,தொடர்ந்து விற்பனையில் பெரும் சரிவினைக் கண்டு வருவதால் இந்தியாவில் அதன் உற்பத்தியினை நிறுத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுவனம் அறிவித்தது. இதனால்,ஆலையில் பணிபுரியும், பல ஆயிரம் பேர் இதனால் தங்களது வேலையினை இழக்கும் சூழ்நிலை இருந்து வருகின்றது. இதுவரை முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் கார்களை உற்பத்தி செய்வதற்கு மட்டும் சில மாதங்கள் ஆலை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் இந்திய தலைவர் அனுராக் மெஹ்ரோத்ரா ராஜினாமா செய்துள்ளார்.ஃபோர்டு இந்தியா செய்தித் தொடர்பாளர் அவரது ராஜினாமாவை உறுதிப்படுத்தினார்.மேலும், செப்டம்பர் 30 நிறுவனத்துடன் மெஹ்ரோத்ராவின் கடைசி நாளாக இருக்கும் என்று அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version