இன்று வெள்ளிக்கிழமை தேதி 16.10.2020, ராகுகாலம் காலை 10.30-12.00, எமகண்டம் மாலை 3.00-4.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்
இன்று செயல்கள் அனைத்தும் சுமூகமாக நடக்கும். உங்கள் வீட்டில் விருந்தினர் வருகை காரணமாக இன்று நீங்கள் உற்சாகத்துடன் இருப்பீர்கள். அவர்களுடன் சேர்ந்து மகிழும் வாய்ப்பு பெறுவீர்கள். இன்று அதிர்ஷ்டம் உங்கள் வாயிற் கதவைத்தட்டும்.
ரிஷபம்
இன்று நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும் போது பாதகமான விளைவுகள் ஏற்படா வண்ணம் வார்த்தைகளை கவனித்துப் பேச வேண்டியது அவசியமாகும்.
மிதுனம்
இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். சவால்கள் நிறைந்து காணப்படும் நாள் என்பதால் உங்கள் உணர்வுகளை கட்டுபடுத்த வேண்டியது அவசியம் ஆகும். மனக் குழப்பங்களை நீக்கி தெளிவாக இருக்க வேண்டும்.
கடகம்
இன்று பொறுப்புகளும் பதட்டமும் காணப்படுவதால் பக்தியுடன் ஸ்லோகம் சொல்வதன் மூலம் நீங்கள் உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முடியும்.இசையை கேட்பதன் மூலமாகவும் உங்கள் மனதை பதட்டமின்றி வைத்துக் கொள்ளலாம்.
சிம்மம்
இன்று உங்கள் இலக்குகளில் வெற்றி கிடைக்கும் நாள். உங்களின் நேர்மையான முயற்சி மூலம் உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை நீங்கள் வெளிக்கொண்டு வருவீர்கள். இன்று முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
கன்னி
இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டிய நாள். உங்கள் உடன் பிறந்தவர்களால் தொல்லையும் பிரச்சினைகளும் ஏற்படலாம். இன்று அவர்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்
இன்று உங்கள் லட்சியங்களை அடைவதற்கு சாதகமான நாள் அல்ல. இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். இன்று நீங்கள் சமயோசித புத்தியுடன் செயல்பட வேண்டும். உங்கள் இலக்குகளை அடைவதில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
விருச்சிகம்
உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைய இன்று கடினமாக உழைக்க வேண்டியது அவசியமாகும். நீங்கள் வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை அவசியம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
தனுசு
இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை குறைந்த முயற்சியில் செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடுகள் நன்மை அளிக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாகும்.
மகரம்
இன்று நீங்கள் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். எது நடக்கிறதோ அதை அப்படியே எற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமைய இறை வழிபாடு மற்றும் பிரார்த்தனையை மேற்கொள்ளுங்கள்.
கும்பம்
இன்று முன்னேற்றகரமான பலன்கள் இருக்காது. உங்கள் மனக் குழப்பமும் வளர்ச்சியில் தடையை ஏற்படுத்தும். இது உங்களுக்கு பாதகமாக இருக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு சாதகமான நாள். நம்பிக்கை நிறைந்து காணப்படும் நாள். கடின உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும்.