மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று ஞாயிற்றுக்கிழமை தேதி 31.01.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 3.30-4.30, ராகுகாலம் மாலை 4.30-6.00, எமகண்டம் காலை 12.00-1.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு நீங்க வாய்ப்புகள் உண்டு. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை ஓரளவு தீரும். எடுத்த காரியங்களை செய்வதற்கு முன்பு சிந்தித்து செயல்படுவது உத்தமம்.
ரிஷபம் :
தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் உண்டாகும்.
மிதுனம் :
குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் இருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக அமையும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழக் கூடும்.
கடகம் :
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் தாமதமாகவே செய்து முடிக்கும் நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் இருக்கும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும்.
சிம்மம் :
குடும்பத்தில் குழந்தைகளின் மகிழ்ச்சியால் நிம்மதி பெருகும். உங்களின் உடனடி சிந்திக்கும் திறமையால் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் . உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினை தீரும்.
கன்னி :
பிள்ளைகளால் வீண் செலவுகள் இருக்கும். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும் . குடும்ப பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை சற்று நீங்கும்.
துலாம் :
குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல கூடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் வந்தடையும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும்.
விருச்சிகம் :
உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். நீண்ட நாள் தடைப்பட்டிருந்த வேலை பளு இன்று எளிதில் முடியும். எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைப்பதால் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக அமையும்.
Read more – முதல்வர் பழனிசாமியை சந்தித்தது மகிழ்ச்சி : தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன்
தனுசு :
உங்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்பட செய்யும் செயல்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினைகள் குறையும்.
மகரம் :
குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும்மற்றும் புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது அவசியம்.
கும்பம் :
நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.புதிய முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
மீனம் :
எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிட்டும். உடனிருப்பவர்களால் அனுகூலம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.




