இன்றைய ராசிபலன் 26.04.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று திங்கட் கிழமை தேதி 26.04.2021, நல்ல நேரம் :காலை 6.30-7.30, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 7.30-9.00 , எமகண்டம் மாலை 10.30- 12.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

குடும்பத்தில் உறவினர்கள் வழியில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களின் மூலம் நன்மை உண்டாகும். நண்பர்களின் வழியில் பணதேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம் :

நீங்கள் எடுக்கும் காரியங்களில் உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதி நிலவ முக்கிய காரணமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள்.

மிதுனம் :

தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க சில இடையூறுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிடைக்கும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.

கடகம் :

குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும்.

சிம்மம்:

குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதல் ஏற்பட குழந்தைகள் உதவியாக இருப்பார்கள். கிடைக்க வேண்டிய கடன் உதவி அடைய தாமதம் ஆகலாம். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி:

வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக காணப்படும். வேலை பார்க்கும் நிறுவனத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாகன யோகம் கைகூடும்.

துலாம்:

உறவினர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகள் கைகூடும். எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும்.

விருச்சிகம்:

குடும்ப உறவு மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட கருது வேறுபாடு குறைத்து ஒற்றுமை ஓங்கும். தொழிலில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. ஆடம்பர பொருட்களை வாங்குவதை தவிர்க்கலாம்.

தனுசு:

குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் அரங்கேறும். எடுக்கும் காரியங்களிலும், வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளிடம் நேரத்தை செலவழித்து மகிழ்ச்சி அளிப்பீர்கள்.

மகரம்:

கணவன் மனைவிக்கு இடையே இருந்த தேவையில்லாத வாக்குவாதங்கள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுக்கு குடும்ப உறுப்பினர்கள் ஆதரிப்பார்கள். வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை பளு அதிகமாக காணப்படும்.

கும்பம்:

குடும்ப உறுப்பினர்களின் வருகையால் ஒற்றுமை நிலவும். புதிய தொழில் தொடங்க சிறப்பான நாளாக அமையும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பாராத தனவரவு அதிகரிக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும் .

மீனம்:

குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல வேண்டிய நிலை உண்டாகலாம். சக ஊழியர்களால் உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

Exit mobile version