இன்றைய ராசிபலன் 24.04.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று சனிக் கிழமை தேதி 24.04.2021, நல்ல நேரம் :காலை 8.30-9.30, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 9.00-10.30 , எமகண்டம் மாலை 1.30- 3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்:

குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தைகளில் இனிமை சேர்த்துக் கொள்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஒரு சில காரியங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.

ரிஷபம்:

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலக உங்களால் முடிந்த காரியங்களை மேற்கொள்வீர்கள். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்கள் சில நேரம் தாமதமாகலாம். வெளியே
வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

மிதுனம்:

வாழ்க்கைத் துணைவரிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் விஷயத்தில் கவனம் ஏற்படுத்திக்கொள்வது பயனளிக்கும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் அடைய போராடுவீர்கள்.

கடகம்:

உங்களின் தைரியம் மற்றும் உறுதியால் ஆற்றும் பணிகள் வெற்றியடையும். பொழுதுபோக்கு விஷயங்களை சற்று குறைத்து கொள்வதன் மூலம் மற்ற தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

சிம்மம்:

குடும்ப உறுப்பினர்களின் உதவியால் மனஉறுதி மேம்படும். உங்கள் செயல்களில் இழப்பு ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். பணிகளை உறுதி மற்றும் பொறுமையுடனும் செயல்படுவதால் ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி:

தொழில் ரீதியாக அலைச்சலும் மனக்குழப்பமும் நீங்கும். நிதி மற்றும் கொடுக்கல் வாங்கல் பணம் சம்பந்தமான விஷயங்களில் சற்றுகவனம் தேவை. உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

துலாம்:

வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். வேலையில் சக பணியாளர்களின் ஆதரவால் வேலை பளு குறைவாக காணப்படும். கணவன் – மனைவி இடையேயான நேர்மையான அணுகுமுறை நல்லுறவிற்கு வழிகாட்டும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும்.

விருச்சிகம்:

தொழில் மற்றும் வேலை செய்யும் இடத்தில் நம்பிக்கையான தகவல்களை வர வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணை வழியே நன்மைகள் காணப்படும். வெளியூர் பயணங்கள் மூலம் வெளிவட்டார நட்பு உண்டாகும். ஆரோக்கியம் சிறக்க உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

தனுசு:

நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் பொறுப்பு காரணமாக சேமித்து வைத்த பணம் செலவிட நேரிடும். தொழில் மற்றும் வேலையில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகி லாபம் அதிகரிக்கும். பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள்.

மகரம்:

மனதளவில் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவு ஏற்பட போராடுவீர்கள். கணிசமான தொகையை பராமரிப்பதை கடினமாக உணர்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

கும்பம்:

வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பண சம்பந்தமான விஷயத்தில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். முதலீடு சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மீனம்:

தொழில் ரீதியான பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். இரவு நேர பயணங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பணிகளை மேற்கொள்ளும் போது பிறரிடம் சில குறைபாடுகளைக் காண்பீர்கள். குழந்தைகள் விஷயத்தில் சற்று பொறுமையுடன் கையாளுவது நன்மை அளிக்கும்.

Exit mobile version