மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று செவ்வாய் கிழமை தேதி 22.12.2020,நல்ல நேரம் :காலை 7.45-8.45, மாலை 4.45-5.45,
ராகுகாலம் மாலை 3.00- 4.30, எமகண்டம் காலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
இன்று எடுக்கும் காரியங்களில் சிறு தடைகள் உண்டாகும். குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மற்றும் மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு அதன் பின்னர் மறையும்.
ரிஷபம்:
வேலை பார்க்கும் நிறுவனத்தில் கவனமாக பேசுவது மற்றும் எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.
மிதுனம்:
உறவினர்கள் உறுதுணையாய் நீங்கள் நிகழ்த்தும் காரியங்களில் நிற்பார்கள். உடல் ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாய் இருத்தல் நல்லது.கடவுள் அல்லது குல தெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும்.
கடகம்:
வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.குடும்ப சொந்தக்காரர்களின் வகையில் செலவுகள் உண்டாகும்.நிலம் மனை வீடு சம்பந்தமான முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும்.
சிம்மம்:
வேலை மற்றும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற கடுமையான உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்.பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் மனதளவில் நிம்மதியாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கன்னி:
குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தீடிர் சுபமங்கள நிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய தொழில் மற்றும் புதிய முதலீடுகள் செய்ய ஆர்வமாய் இருப்பீர்கள்.
துலாம்:
மனதில் இருந்த ஒரு நிகழ்வினை செயலாக கடுமையாக போராடுவீர்கள்.வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். .நிலம் மற்றும் சொத்து விஷயத்தில் உடன்பிறப்புகளிடம் மனக்கசப்பு ஏற்படும்.
விருச்சிகம்:
குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பணியின் காரணமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் பெறலாம்.எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.
தனுசு:
குடும்ப பெரியவர்களின் உடல் நிலையை சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.பெற்றோரின் அன்பால் உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.புதிய நபர்களிடம் பழகும் போது எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது.
மகரம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைக்கூடும்.பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் மனதளவில் நிம்மதியாக காணப்படுவீர்கள். குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு சிறிது செலவு உண்டாகும்.
கும்பம்:
எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அருமையாக உள்ளது.பயணத்தின் போது சற்று கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.தொழில் போன்ற விஷயங்களில் பிறரை நம்பாமல் நீங்களே முழுமூச்சுடன் செயல்படுவது நல்லது.
மீனம்:
குழந்தைகளின் விஷயத்தில் மிக கவனம் தேவை .குடும்ப பெரியவர்களிடம் ஆலோசனை பெறுவது நன்மையளிக்கும்.குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கவனித்து விடவேண்டும்.வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.




