இன்றைய ராசிபலன் 22.04.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று வியாழன் கிழமை தேதி 22.04.2021, நல்ல நேரம் :காலை 10.30-11.30, மாலை 12.30- 1.30, ராகுகாலம் காலை 1.30-3.00 , எமகண்டம் மாலை 6.00- 7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ எதிலும் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கைகூடும் நேரத்தில் தடைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம்.

ரிஷபம் :

நண்பர்களின் உதவியுடன் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள்.

மிதுனம் :

குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான சுபகாரியங்கள் வந்தடையும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

கடகம் :

உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் அடைவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பிறரிடம் இருந்து எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

சிம்மம் :

நீங்கள் எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். சிறப்பான பணவரவால் கடன்கள் குறையும்.

கன்னி :

குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் மன மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். சிக்கனத்தை கடைபிடித்தால் பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

துலாம் :

எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு கூடும். தொழிலில் அனுபவம் வாய்ந்த மனிதர்களின் ஆலோசனைகள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

விருச்சிகம் :

புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

தனுசு :

குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகும். நீங்கள் எடுத்த முயற்சியில் இருந்த தடைகள் விலகி நல்லது நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.

மகரம் :

உங்கள் ராசிக்கு காலை 8.15 மணியிலிருந்து சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பின் லாபம் கிட்டும்.

கும்பம் :

உறவினர்கள் வருகையால் சுபசெலவுகள் உண்டாகும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய வண்டி வாகனம் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும்.

மீனம் :

திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

Exit mobile version