இன்றைய ராசிபலன் 16.04.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று வெள்ளி கிழமை தேதி 16.04.2021, நல்ல நேரம் :காலை 9.30-10.30, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 10.30- 12.00, எமகண்டம் மாலை 3.00-4.30 இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

சுபகாரிய பேச்சுகளில் சாதகமான பலன் உண்டாகும். உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்.

ரிஷபம் :

குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று எந்த காரியத்தையும் தொடங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு புதிய பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

மிதுனம் :

தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம்.

கடகம் :

எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திடீர் பணவரவு உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

சிம்மம் :

உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கன்னி :

திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உங்களுக்கு புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளால் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

துலாம் :

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும்.

விருச்சிகம் :

மனைவி வழி உறவினர்களால் பணத்தேவை பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்களை தவிர்க்கலாம். வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் லாபம் தடைப்படாது.

தனுசு :

உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் பணிசுமை குறையும்.

மகரம் :

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. பூர்விக சொத்துகள் மூலமாக தொழிலை மேம்படுத்துவீர்கள்.

கும்பம் :

புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். பணவரவு சுமாராக இருந்தாலும் தேவைகள் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் முடிவிற்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம் :

எடுத்த காரியங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

Exit mobile version