இன்றைய ராசிபலன் 13.04.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று செவ்வாய் கிழமை தேதி 13.04.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 3.00-4.30, எமகண்டம் காலை 9.00-10.30 இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

குழந்தைகளின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வேலையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

ரிஷபம் :

குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்க சிறப்பான நாளாக அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும்.

மிதுனம் :

குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செய்து முடிப்பீர்கள். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

கடகம் :

குடும்பத்தில் இருந்த குறைகள் நிறைகளாக மாறும். உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். புதிய வாகனம் வாங்குவதற்கான யோகம் ஏற்படும்.

சிம்மம் :

தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி :

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

துலாம்:

வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். வேலையில் சக பணியாளர்களின் ஆதரவால் வேலை பளு குறைவாக காணப்படும். கணவன் – மனைவி இடையேயான நேர்மையான அணுகுமுறை நல்லுறவிற்கு வழிகாட்டும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும்.

விருச்சிகம்:

தொழில் மற்றும் வேலை செய்யும் இடத்தில் நம்பிக்கையான தகவல்களை வர வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணை வழியே நன்மைகள் காணப்படும். வெளியூர் பயணங்கள் மூலம் வெளிவட்டார நட்பு உண்டாகும். ஆரோக்கியம் சிறக்க உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

தனுசு:

நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் பொறுப்பு காரணமாக சேமித்து வைத்த பணம் செலவிட நேரிடும். தொழில் மற்றும் வேலையில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகி லாபம் அதிகரிக்கும். பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள்.

மகரம்:

மனதளவில் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவு ஏற்பட போராடுவீர்கள். கணிசமான தொகையை பராமரிப்பதை கடினமாக உணர்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

கும்பம்:

வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பண சம்பந்தமான விஷயத்தில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். முதலீடு சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மீனம்:

தொழில் ரீதியான பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். இரவு நேர பயணங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பணிகளை மேற்கொள்ளும் போது பிறரிடம் சில குறைபாடுகளைக் காண்பீர்கள். குழந்தைகள் விஷயத்தில் சற்று பொறுமையுடன் கையாளுவது நன்மை அளிக்கும்.

Exit mobile version