இன்றைய ராசிபலன் 04.03.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று வியாழன் கிழமை தேதி 04.03.2021, நல்ல நேரம் :காலை 12.30-1.30, ராகுகாலம் காலை 1.30-3.00, எமகண்டம் காலை 6.00-7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

இன்று உங்களுக்கு மாலை 06.20 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் வந்தடையும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம் :

குடும்த்தில் காணப்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மிதுனம் :

நீங்கள் எடுக்கும் காரியங்களில் தடைகள் ஏற்படலாம் . தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதால் மகிழ்ச்சி நீடிக்கும்.

கடகம் :

வேலை காரணமாக உங்களுக்கு எதிர்பாராத திடீர் பயணங்கள் ஏற்படும். உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்தடையும். சுய தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

சிம்மம் :

குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். உத்தியோகத்தில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி அசத்துவீர்கள். அதிகமாக காணப்பட்ட வேலைபளு குறையும்.

கன்னி :

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வேலையில் உடனிருப்பவர்களால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

துலாம் :

பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். நினைத்த சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

விருச்சிகம் :

குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பாராத உதவி கிட்டும்.

தனுசு :

இன்று வேலையில் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும்.

மகரம் :

உங்களுக்கு பொருளாதார நிலை சீராகி தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற உயர்வு கிட்டும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

Read more – HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

கும்பம் :

குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிட்டும்.

மீனம் :

உங்கள் ராசிக்கு மாலை 06.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை. உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்பட்டு நிம்மதியில்லாத நிலை தோன்றும். பிறரிடம் பேசும்போது கவனமாக இருப்பது நல்லது.

Exit mobile version