இன்றைய ராசிபலன் 03.03.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று புதன் கிழமை தேதி 03.03.2021, நல்ல நேரம் :காலை 9.30-10.30, மாலை 4.30-5.30, ராகுகாலம் காலை 12.00-1.30, எமகண்டம் காலை 7.30-9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

குடும்பத்தில் உடன் பிறப்புகள் வழியாக சுப செய்திகள் வந்தடையும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம் :

வீட்டில் உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பெண்களின் சிக்கனத்தால் குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய நண்பர்கள் இணைந்து முன்னேற்றம் அடைவீர்கள்.

மிதுனம் :

தேவைக்கு அதிகமாக ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

கடகம் :

நீங்கள்எடுக்கும் காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தினரின் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

சிம்மம் :

நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். உறவினர்கள் உதவியால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள்.

கன்னி :

பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

துலாம் :

குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைத்து வெற்றி நோக்கி பயணம் செய்வீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம் :

உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பொருளாதார நெருக்கடி ஓரளவு குறையும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற சிக்கலை தவிர்க்கலாம்.

தனுசு :

பிள்ளைகளால் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மகரம் :

புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைத்து பணவரவு தாராளமாக அமையும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல வளர்ச்சி உண்டாகும்.

Read more – BSNL ரூ.249 அறிமுகம் : இப்படி ஒரு சலுகையா..!!

கும்பம் :

எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். . நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். தொழில் ரீதியான பிரச்சனைகளில் உறவினர்கள் உதவி செய்வார்கள்.

மீனம் :

இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும்.

Exit mobile version